Pages

Subscribe:

Featured Video

Labels

Monday, May 9, 2011

தேர்தல் முழுவதும்

மேற்கு வங்க மாநிலத்தில் இறுதி கட்ட வாக்குப் பதிவு இன்று (மே 10) நடைபெறுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏற்கெனவே 5 கட்டங்களாக 280 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு முடிந்த நிலையில் மீதம் உள்ள 14 தொகுதிகளுக்கு இன்று (மே 10) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் 9ல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 4 இடங்களிலும், ஜார்க்கண்ட் (நரேன்) கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன. இடதுசாரிக் கட்சிகளும் பாரதிய ஜனதாக் கட்சியும் 14 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மொத்தம் 7 பெண்கள் களத்தில் உள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களில் கடந்த மாதமே தேர்தல் முடிந்துவிட்ட நிலையிலும் கூட மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல் முற்றிலும் நிறைவடைந்த பின்னரே வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

அதே போல கருத்துக் கணிப்புகளும் மக்களை திசை திருப்பும் என்று கருதியதால் வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு வெளியே வரும்போது எடுக்கப்பட்ட கணிப்புகளை வெளியிடவும் (எக்ஸிட் போல்) தேர்தல் ஆணையம் தடை விதித்தது.


செவ்வாய்க்கிழமையுடன் 5 மாநிலங்களிலும் தேர்தல் முழுவதும் நிறைவடைவதால் மாலையில் ஊடகங்களில் வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளியாகும் என

0 comments:

Post a Comment